ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
ஹிந்தித் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பாகப் பேசப்படுபவர். இன்று கல்யாணம், விவகாரத்து ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து சில டுவீட்டுகளைப் பதிவு செய்துள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து செய்தியைத் தொடர்ந்துதான் அவர் இதைப் பதிவிட்டிருக்க வேண்டும்.
அதில், “திருமணங்களின் அபாயத்தை, ஸ்டார்களின் விவகாரத்துதான் டிரென்ட் செட்டராக அமைந்து இளைஞர்களை எச்சரிக்கிறது. கல்யாணம்தான் காதலை சீக்கிரத்தில் கொன்றுவிடுகிறது. திருமணம் என்ற ஜெயிலுக்குள் செல்வதற்கு முன்பு, காதல் எது வரை தொடர்ந்து இருக்கிறதோ அதுவரையில் மகிழ்ச்சியின் ரகசியமாக அது இருக்கிறது.
ஒரு திருமணத்தில் காதல் என்ற கொண்டாட்டம் 3 முதல் 5 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. புத்திசாலிகள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணம் என்பது இருவரின் அபாயமான தகுதிகளை வைத்து அமைதியாக நடைபெற வேண்டும். ஆனால், சுதந்திரமாக விலகுவதால், விவாகரத்து தான் சங்கீத் உள்ளிட்டவைகளுடன் கொண்டாடப்பட வேண்டும். நமது மோசமான முன்னோர்களால் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தீய பழக்கம் திருமணம். அது தொடர்ந்து சுழற்சியாக சோகத்தைக் கொடுத்து வருகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்களுக்கு வழக்கம் போல கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.