இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஸ்கை பிலிம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் படம் வேலன். இதில் கென்னடி கிளப்பில் அறிமுகமான மீனாட்சி கோவிந்தன் ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது விக்ரமுடன் கோப்ரா, சுசீந்திரன் இயக்கத்தில் சிவ சிவா படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை கவின் எழுதி, இயக்கியுள்ளார். டிசம்பர் 31 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மீனாட்சி பேசியதாவது:
இந்த காலேஜில் மூணு வருடத்திற்கு முன்பு முன்னாடி சீட் கேட்டு வந்தேன் கிடைக்கவில்லை ஆனால் இப்பொது ஒரு நடிகையாக, செலிபிரிட்டியாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் நாங்களே சிரித்து, சிரித்து ரீடேக் வாங்கினோம், இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். என்றார்.