இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு |

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படம், பாண்டிராஜின் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படம் பிப்-4ஆம் தேதி தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து 5 மொழிகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யாவின் படம் தியேட்டர்களில் முதன் முறையாக பான் இந்தியா ரிலீஸாக வெளியாவது இதுவே முதன்முறை.. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சூர்யாவின் படங்களுக்கென அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். கன்னடத்தில் ஓரளவுக்கு ரசிகர்கள் இருந்தாலும் ஹிந்தியில் இதுவரை நேரடியாக சூர்யாவின் படங்கள் தியேட்டரில் ரிலீசானதில்லை.
அதேசமயம் சூர்யாவின் முந்திய இரண்டு படங்களான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் என்கிற பெருமையை ஜெய்பீம் பெற்றுள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் இந்தப்படத்தை பான் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் வெளியிடும் முடிவை எடுத்துள்ளார்கள் என்றே திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.
முதல் பாடல்
இதனிடையே இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை(டிச., 15) மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு ஒரு சிறு வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி.இமான் இசையமைக்க, டைரக்டர் விக்னேஷ்சிவன் பாடலை எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். அந்த வகையில் அந்த பாடலில் சூர்யா, டி.இமான், விக்னேஷ்சிவன், ஜி.வி.பிரகாஷ், அனிருத் என ஐந்து பிரபலங்கள் இணைந்துள்ளனர். வருகிற பிப்ரவரி 4-ந்தேதி ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.