‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

பாலிவுட்டின் முன்னணி நடிகர் பங்கஜ் திரிபாதி. மிர்ஸாபூர் வெப் சீரிஸ் மூலம் தமிழ்நாட்டுக்கும் அறிமுகமானர். காலா படத்திலும் நடித்திருந்தார். பங்கஜ் திரிபாதிக்கு ஒரு விளம்பர படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதை நிராகரித்துள்ள அவர் அது குறித்து கூறியிருப்பதாவது: நான் ஒரு நடிகன். வியாபாரி அல்ல. என்னுடைய நாட்டின் பொறுப்புள்ள ஒரு குடிமகனும் கூட. நான் சொல்வதையும், செய்வதையும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் பணத்துக்காக நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? நான் என்னுடைய கலைக்கு உண்மையானவனாக இருந்து வருகிறேன். ஒரு பிரபலமாக என்னுடைய ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன் என்கிறார் பங்கஜ் திரிபாதி.