ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான அரண்மனை 3 படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளதாக ஜீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜீ5 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஜீ5 நிறுவனம் அடுத்தடுத்து நல்ல கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம் திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது அரண்மனை 3' திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது சித்திரை செவ்வானம் படத்தை வெளியிட்டுள்ளது.