மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
சென்னை : நடிகர் அஜித்குமார் தன்னை ‛தல என அழைக்க வேண்டாம், அஜித் குமார், அஜித் அல்லது ‛ஏகே என்று கூட குறிப்பிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் ஏற்கனவே ரசிகர் மன்றமே வேண்டாம் என கலைத்துவிட்டார். ரசிகர்கள் அவரவர் வேலையை பாருங்கள் என அறிவித்திருந்தார். அதோடு தன்னை அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்கள் பட்டப்பெயர் வைத்து அழைத்தபோது அப்படி அழைக்க வேண்டாம் என அறிவித்தார். மேலும் தன்னுடைய படங்களிலும் அஜித் குமார் என்றே தனது பெயர் வரும்படி பார்த்துக் கொண்டார். இருப்பினும் ரசிகர்கள் இவரை ‛தல தல என்று தான் அழைத்து வந்தனர். தன் ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தாலும் அவருக்கென்று ஒரு தனிக்கூட்டம் உள்ளது. அதிலும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியாது. சமயங்களில் எல்லை மீறிய சண்டைகள் கூட நடந்தேறி உள்ளது.
இந்நிலையில் திடீரென நடிகர் அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அதில், ‛‛மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு... இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், அஜித் அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அஜித் தெரிவித்துள்ளார்.