‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மாநாடு படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை திடீரென ‛‛தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவிக்கிறேன்'' என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.
பைனான்சியருக்கு தயாரிப்பாளர் பணம் கொடுக்க வேண்டியிருந்ததால் கடைசிநேரத்தில் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து, ‛‛படம் இன்று வெளியாகி உள்ளது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையே இந்த பிரச்னை சுமூகமாக தீர்ந்தது எப்படி என தகவல் கிடைத்துள்ளது.
இதுப்பற்றி இந்த பிரச்னையை தீர்க்க உதவியர்களில் முக்கியமானவரான தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் நம்மிடம் கூறுகையில், ‛‛மாநாடு தயாரிப்பாளர், பைனான்சியர் உத்தம்சந்திற்கு பணம் தர வேண்டியிருந்ததால் கடைசிநேரத்தில் படவெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. உதயநிதியை இந்த பிரச்னையை தீர்க்க முன்வந்தார். ஆனால் படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் அவர் விலகி கொண்டார். பின்னர் சிம்பு, அவரது பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா ஆகிய மூவரும் இந்த படத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். இவர்களுடன் நானும், தயாரிப்பாளர்கள் சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் ஆகியோரும் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தோம். இந்த தருணத்தில் பைனான்சியர் உத்தம்சந்திற்கும் நன்றி சொல்லனும். அவரும் கறாராக நடக்காமல் நாங்கள் சொல்லியதை ஏற்றுக் கொண்டார். படம் வெளியாகி உள்ளது. அனைவருக்கும் நன்றி'' என்றார்.