புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சர்ச்சைகளையும், கங்கனா ரணவத்தையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா, காலிஸ்தான் தீவிரவாதிகளை கொசுவை நசுக்குதுபோல நசுக்கினார் என்று கூறிய கையோடு டில்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகளோடு ஒப்பிட்டு பேசினார். இது சீக்கிய சமூகத்தை சேர்ந்தர்களை புண்படுத்துவதாகவும், கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டில்லி சிரோண்மணி குருத்வாரா கமிட்டி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கங்கனா மீது இந்திய தண்டனை சட்டம் 295வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் பயப்படுகிறவரா கங்கனா... சமூகவலைதளத்தில் தான் ஒயின் கோப்பையுடன் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்னொரு நாள், இன்னொரு எப்.ஐ.ஆர் ஒரு வேளை என்னை அவர்கள் கைது செய்ய வந்தால், நான் வீட்டில் வேறொரு மூடில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.