Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சந்திரபாவு நாயுடு மனைவி மீது அவதூறு விமர்சனம் : ஜூனியர் என்.டி.ஆர் ஆவேசம்

22 நவ, 2021 - 15:43 IST
எழுத்தின் அளவு:
Stop-personal-attacks-says-Junior-NTR-to-Politicians

ஆந்திர மாநில சட்டசபை விவாதத்தின் போது ஆளும்கட்சி எல்.எல்.ஏ ஒருவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து தனிப்பட்ட முறையில் சில அவதூறு கருத்துக்களை வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் வருவேன் என்று சபதமிட்டு கண்ணீருடன் வெளியேறினார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான ஜூனியர் என்.டி.ஆர் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நமது மொழி நமது குணத்தை குறிக்கிறது. அரசியலில் மற்றவர்களை விமர்சிப்பது வழக்கம்.

விமர்சனங்கள் மக்கள் பிரச்சனைக்காக இருக்க வேண்டும். அவை தனிப்பட்டதாக இருக்கக்கூடாது. தனி நபர்களை அவதூறாக பேசக்கூடாது. பெண்களை மதிப்பது நமது பாரம்பரியம் , அதைக் கைவிடுவது பேரழிவை ஏற்படுத்தும். ஆந்திர சட்டசபையில் நடந்த சம்பவம் என்னை காயப்படுத்தியுள்ளது.

நாம் தனிமனித தாக்குதல்களை நடத்தினால் குறிப்பாக பெண்களுக்கு எதிரான கேவலமான வார்த்தைகளால் அவதூறு செய்தால் அது காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு வழிவகுக்கும். பெண்களை மதிப்பது நமது இரத்தத்திலும் பாரம்பரியத்திலும் உள்ளது. இந்த பாரம்பரியத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அது அடுத்த தலைமுறைக்கு பெரும் அவமானமாக இருக்கும்.

நான் நந்தமுரி குடும்ப உறுப்பினராக இதனை பேசவில்லை. ஒரு மகனாக, கணவனாக, தந்தையாக, இந்தியக் குடிமகனாக, தெலுங்கனாகப் பேசுகிறேன். பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் இந்த நாகரீகமற்ற கலாச்சாரத்தை அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தலைமுறைக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிஷ்யம்-2 ஓடிடி ரிலீஸ் ; புதிய சிக்கல்த்ரிஷ்யம்-2 ஓடிடி ரிலீஸ் ; புதிய ... சுரேஷ் கோபியின் காவல் நவ-25ல் ரிலீஸ் சுரேஷ் கோபியின் காவல் நவ-25ல் ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhaskaran - Chennai,இந்தியா
24 நவ, 2021 - 19:05 Report Abuse
Bhaskaran நம்மவூர் மந்திரிகளை பின்பற்றி பேசியிருப்பாங்க போலிருக்கு கேரக்ட்டர் ஸசினேஷன் தான் நம்ஊர் அரசியல் வாதிகள்பத்திரிகைகளின் முதல் ஆயுதம்
Rate this:
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
24 நவ, 2021 - 08:23 Report Abuse
DARMHAR தனக்கு வந்த தானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும் ரோஜாவாவைப்பற்றி நாயுடுகாரு இழிவாக பேசலாம் ஆனால் நாயுடு காரைப்பற்றியாரும் இழிவாக பேசக்கூடாது .இது எந்த வகையில் நியாயம்?
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
23 நவ, 2021 - 17:10 Report Abuse
Indhuindian நடிகை ரோஜாவை பற்றி நாயுடு காரு தாறுமாறா பேசினப்ப இவர் எங்க போனாரு ஒரு வேலை கோமாவுலே இருந்தாரா இப்ப பொங்கரரே
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
23 நவ, 2021 - 15:29 Report Abuse
vbs manian சூப்பர் ஜூனியர் என் டீ ஆர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in