6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியான இளையராஜா படங்கள் | சந்திரமுகி 2 படத்தில் திரிஷா? | ரத்தம் படத்திற்காக உருவாகும் சிறப்பு பாடல் காட்சி | அட்லியின் 'ஜவான்' படத்தை பற்றி மனம் திறந்த ஷாருக்கான் | கீர்த்தி சுரேஷை ஏமாற்றிய மலையாள படம் | ருத்ரன் படத்திற்காக 10 கிலோ எடை கூடிய லாரன்ஸ் | பிரபாஸின் சலார் படத்தில் நடிக்க பிருத்விராஜ் போட்ட கண்டிஷன் | பாயும் ஒளி நீ எனக்கு டீசர் வெளியீடு | சல்மானைக் கவர்ந்த 'ஊ சொல்றியா மாமா' | 1 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த 'டாப்கன் மேவ்ரிக்' |
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள ராகினி திவேதி இப்போது படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அவர் நடித்து இடையில் நிறுத்தப்பட்ட காந்திகிரி படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது. இது தவிர சாரி: கர்மா ரிட்டன் என்ற படத்தில் நடிக்கிறார். இது பெண்ணை கதை களமாக கொண்ட படம். முதன் முறையாக இந்த படத்தில் ராகினி ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். க்ரைம் த்ரில்லர் கதை.
இது தவிர பிரம்மா இயக்கும் ராணா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த பாடல் காட்சி பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. பெங்களூரை அடுத்த ஹேமாகள்ளி கிராமத்தில் பிரமாண்ட கிராம திருவிழாவை நடத்தி இந்த பாடலை படமாக்க திட்டமிட்டிருந்தனர். புனித் ராஜ்குமார் மறைவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. அடுத்த வாரம் படப்பிடிப்புகள் நடக்கிறது.