ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கவுதம் மேனன் நடிக்கும் அன்புசெல்வன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் பா.ரஞ்சித் வெளியிட்டார். இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று கவுதம் மேனன் கூறியதை தொடர்ந்து தனது டுவிட்டர் பதிவை நீக்கினார் பா.ரஞ்சித்.
இதையடுத்து அன்பு செல்வன் படக்குழுவினர் கவுதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டு படத்தில் அவர் நடித்து இருப்பது உண்மை . வினா என்கிற படத்தின் பெயர் அன்பு செல்வன் என்று மாற்றப்பட்டதே குழப்பத்துக்கு காரணம் என்றும் தெளிவுப்படுத்தினர்.
இந்த நிலையில் அன்பு செல்வன் படக்குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜெய் கணேஷ் இயக்கத்தில் வினா என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு 2018ம் ஆண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு படத்தின் பணிகள் நடக்கவில்லை. தற்போது வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன்.
ஒப்பந்தத்தை மீறி, படத்தின் தலைப்பு, இயக்குனரை மாற்றி அன்புசெல்வன் என்ற பெயரில் விளம்பரம் செய்து வருகிறார். அதனை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற தனது புகாரில் கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.