போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது கோயில் களுக்கு சென்று தரிசனங்கள் செய்து வரும் அவர்கள், தங்களது பிறந்த நாட்களையும் விமரிசையாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை நாளையும் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். அதுகுறித்த வீடியோ ஒன்றையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளனர். மேலும், விக்னேஷ்சிவன் பதிவிட்டுள்ள செய்தியில், மகிழ்ச்சி என்ற பயிற்சியை ஒவ்வொரு நாளும் செய்யுங்கள். மகிழ்ச்சியானது பட்டாசுகளைப்போன்று வெடிக்க வேண்டும். அதோடு, நம்முடைய இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைவதற்கு விடா முயற்சி செய்ய வேண்டும். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் மகிழ்ச்சியை கொண்டாட தவறக்கூடாது. வாழ்க்கையை கொண்டாடி மகிழத்தான் பண்டிகைகள் வருகின்றன. நம்முடைய வழக்கமான பணிகளில் இருந்து சிறிதுநேரம் நல்ல விசயங்களைப்பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள். அப்படி இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள என்று பதிவிட்டுள்ளார் விக்னேஷ்சிவன்.