தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
வினோத் குமார் என்பவரது இயக்கத்தில் கவுதம் மேனன் நடிப்பதாக அன்புச்செல்வன் என்ற படத்தின் போஸ்டரை இன்று(நவ., 3) இயக்குனர் பா ரஞ்சித் டுவிட்டரில் வெளியிட்டார். ரஞ்சித்தின் டுவீட்டை ரீடுவீட் செய்து கவுதம் மேனன் அதிர்ச்சி வெளியிட்டிருந்தார்.
" இது எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. இது என்ன படம் என்று எனக்கே தெரியாது. இப்படத்தின் இயக்குனரை நான் சந்தித்ததே இல்லை. படத்தின் தயாரிப்பாளர் பெரிய பிரபலங்கள் ஆக பார்த்து இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது மாதிரியான விஷயங்களை எல்லாம் எளிதாக செய்வதேன். பயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது, " என தன்னுடைய டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கவுதம் மேனன் போன்ற பிரபல இயக்குனர்கள் நடிக்கும் ஒரு படம் என்று சொல்லி இப்படி அதை ஒரு பிரபலமும் டுவீட் செய்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இனி இப்படி போஸ்டரை வெளியிடும் பிரபலங்கள் அவர்கள் அந்தப் படத்தில் நடித்துள்ளார் இல்லையா என்பதை செக் செய்து தான் வெளியிட வேண்டும் போலிருக்கிறது.
கவுதம் மேனனின் இந்த பதிவு குறித்து படக்குழுவினர் சீக்கிரம் ஏதாவது பதில் அளித்தாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.