இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
'நேர் கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜித் - வினோத் கூட்டணி மீண்டும் இணைந்த படம் 'வலிமை'. இதற்கு முன் அஜித் நடிக்கும் சில படங்களுக்கான தலைப்புகள் அறிவிக்கப்படாமலேயே படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வந்தது. ஆனால், 'வலிமை' படத்தைப் பொறுத்தவரையில் படத் தலைப்புடனேயே அறிவிப்பை வெளியிட்டார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அக்டோபர் 18ம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெற்றது. படம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.
இடையில் இப்படம் பற்றி பல முறை 'வலிமை அப்டேட்' கேட்டு ரசிகர்கள் பல தொந்தரவுகளைச் செய்தார்கள். அதையெல்லாம் எப்படியோ சமாளித்து 2022 பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை ஆகியவற்றால் தான் 'வலிமை' படம் இரண்டு வருடங்களை இழுத்துக் கொண்டது. அதனால், அஜித்தின் அடுத்த படம் மிகவும் குறுகிய காலத் தயாரிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.