ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா |

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. நவம்பர் 4-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் பிரமோஷன்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் வியாபாரமும் பேசப்பட்டு வருகிறது. அண்ணாத்த படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை சமீபத்தில் லவ் ஸ்டோரி என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட ஆசிய நாரங் வாங்கியிருக்கிறார். இவர்தான் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தையும் தயாரிக்கப் போகிறார். தெலுங்கு பதிப்பிற்கு பெத்தண்ணா என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான கபாலி, பேட்ட, தர்பார் போன்ற படங்கள் தெலுங்கில் பெரிதாக வசூல் செய்யாத நிலையில் இந்த படம் பெரிய வசூலை பெற்று தருமா, பொருத்திருந்து பார்ப்போம்.