நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் தெலுங்கில் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி, விஜய் உடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ என்ற ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கியுள்ளார்.
நேற்று முன்தினம், அவர் இன்ஸ்டாகிராமில் தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். குழந்தைக்கு 10 மாதம் ஆகும் நிலையில், இப்போது தான், அவர் இந்த செய்தியை வெளியுலகிற்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து பேட்டியளித்த ஸ்ரேயா, ”என் குழந்தைக்கு 10 மாதமாகிறது. நான் அவளை இனி மறைக்க முடியாது என்று நினைக்கிறேன். அவள் ஏற்கனவே நன்கு பயணித்த குழந்தை, உலகம் முழுவதும் சில பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறாள். ஒரு குழந்தை, தாயைப் பெற்றெடுத்தைப் போல நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ராதா எனது பெஸ்ட் ப்ரெண்ட்' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதோடு தனது குழந்தைக்கு ராதா எனப் பெயர் வைத்திருப்பதையும், அதை அவரது கணவர் மிகவும் விரும்பியதாகவும் குறிப்பிட்டார்.