ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இவரது யதார்த்தமான நடிப்புக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்தார்.
தற்போது பகத் பாசில் சஜிமோன் இயக்கத்தில் மலையன் குஞ்சு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு எர்ணாகுளம் அருகே நடந்து வருகிறது. கதைப்படி பகத் பாசிலின் வீடு மழை வெள்ளத்தில் மூழ்குவது போன்றும், அந்த வீட்டின் கூரை மீது ஏறி நின்று அவர் உதவி கேட்பது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக நீர் நிரப்பிய பிரமாண்ட தொட்டிக்குள் வீடு செட்போட்டு படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்த காட்சி படமானபோது வீட்டின் கூரை சரிந்து விழுந்தது. அதனுடன் பகத் பாசிலும் சேர்ந்து கீழே விழுந்தார். இதில் அவரது முகம், மூக்கு, கை கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக எர்ணாகுளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.