Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

படப்பிடிப்பில் கல்யாண மாப்பிள்ளை ஹீரோ மயங்கி விழுந்ததால் பரபரப்பு

17 நவ, 2022 - 06:24 IST
எழுத்தின் அளவு:
Naga-shaurya-faints-on-shooting-spot

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் நடிகர் நாக சவுர்யா. தமிழில் இயக்குனர் விஜய் இயக்கிய தியா படத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இவரது 24 படமாக எஸ்எஸ் அருணாசலம் என்பவர் டைரக்சனில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தநிலையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார் நாக சவுர்யா. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்து அளிக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

இதுகுறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் வெளியான தகவல்களில் இருந்து நாக சவுர்யா இந்த படத்திற்காக தனது உடலை சிக்ஸ்பேக் வடிவமைப்புக்கு மாற்றும் விதமாக கடுமையான பயிற்சிகள் செய்து வருகிறார் என்றும் அதற்காக தண்ணீர் இல்லாத டயட் உணவுகளை அவர் உட்கொண்டு வந்ததால் ஏற்பட்ட நீர் இழப்பு காரணமாக அவருக்கு இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இன்னும் இரண்டு தினங்களில் (நவம்பர் 20ஆம் தேதி) இவரது திருமணம் பெங்களூரில் நடைபெற இருக்கிறது என்பதுதான்.. புதுமாப்பிள்ளை இப்படி டயட் என்கிற பெயரில் உடலை வருத்திக் கொள்ளலாமா என பலரும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விமர்சனம் செய்ய படிச்சுட்டு வரணுமா ? இயக்குனர் அஞ்சலி மேனனுக்கு குவியும் கண்டனம்விமர்சனம் செய்ய படிச்சுட்டு வரணுமா ? ... டி20 போட்டி : ரசிகரிடம் பந்தயத்தில் 5 லட்சம் தோற்ற இயக்குனர் டி20 போட்டி : ரசிகரிடம் பந்தயத்தில் 5 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in