சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
தமிழில் ஜோக்கர் படம் மூலம் வித்தியாசமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் குருசோமசுந்தரம். அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த குருசோமசுந்தரம் மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான மின்னல் முரளி என்கிற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் நடித்த ஹீரோ டோவினோ தாமஸ் மற்றும் குருசோமசுந்தரம் என இரண்டு பேருமே சூப்பர்மேன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்த படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற குருசோமசுந்தரத்திற்கு அதைத்தொடர்ந்து மலையாளத் திரையுலகில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன.
அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார் குருசோமசுந்தரம். இதற்காக சுமார் 70 புது இயக்குனர்களிடம் கதை கேட்டதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து பத்து படங்களை தேர்ந்தெடுப்பதே தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார் குருசோமசுந்தரம். அவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது இன்னும் கொஞ்ச நாளைக்கு அவரை தமிழ் திரையுலகம் பக்கம் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது..