'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
மலையாள குணசித்ர நடிகர் சீனிவாசின் மகன் வினித் சீனிவாசன். நடிகராக அறிமுகமான வினித் சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் காமெடி வேடத்திலும் நடித்திருந்தார். அதன்பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.
மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், தட்டயன் மறையத்து, ஒரு வடக்கன் செல்பி, தீரா, ஜாக்கப்பிண்ட சுயராஜ்யம் உள்பட பல படங்களை இயக்கினார். கடைசியாக ஹிருதயம் படத்தை இயக்கினார். இதில் மோகன்லால் மகன் பிரணவ், லிஸி மகள் கல்யாணி நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்துகிறார் வினித்.
அபினவ் சுந்தர் என்ற புதுமுகம் இயக்கும் ''முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்'' என்ற படத்தில் நடிக்கிறார். வினித்துடன் சுராஜ் வெஞ்சாரமூடு, அர்ஷா பைஜு, ரியா சைரா, தாரா அமலா ஜோசப் மற்றும் சுதி கொப்பா ஆகியோரும் நடிக்கிறார்கள். சச்சின் வாரியர் இசையமைக்கிறார், விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு செய்கிறார்.