
இனியா சீரியலில் பிக்பாஸ் மதுமிதா அதிரடி என்ட்ரி
ஜூன் 15, 2023
Advertisement
சினிமாவில் பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமான அவர் தற்போது பிரபல சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். இனியா என்ற தொடர் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த தொடரில் திரைக்கதையின் சுவாரசியத்தை மேலும் கூட்டும் வகையில் அதிரடி போலீஸாக வீட்டிற்குள் நுழைந்து காமெடி கலாட்டா செய்ய உள்ளார் மதுமிதா. இனியா தொடரில் நடிப்பது குறித்து மதுமிதா கூறும்போது "ஆல்யா மற்றும் ரிஷியுடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர்களுக்கு நன்றி. இந்த தொடரில் எனது சிறந்த நடிப்பை ரசிகர்களுக்கு வழங்குவேன்" என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!