ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்
ஜூலை 12, 2023
Advertisement
கடந்த 2019ம் ஆண்டில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ‛ஜ ஸ்மார்ட் ஷங்கர்". இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளனர். இதற்கு ‛டபுள் ஜ ஸ்மார்ட்" என்று தலைப்பு வைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. வருகின்ற ஜூலை 12ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது .
இந்த நிலையில் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் இரண்டு கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர் . அதன்படி, பாலிவுட் முன்னணி நடிகை ஸ்ரத்தா கபூர் மற்றும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி இருவரும் இந்த படத்தில் ராம் பொத்தினெனிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர்.
பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் இந்த படம் அடுத்தாண்டு மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது. ராம் பொத்தினேனி தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் ‛தி வாரியர்" படத்தில் நடித்தார். ஆனால் இந்தபடம் வரவேற்பை பெறவில்லை.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!