
நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா திரிஷா?
நடிகை திரிஷா சமீபகாலமாகச் செய்திகளில் பெரிதும் அடிபடவில்லை. உடனடியாகத் திரைக்கு வரவிருக்கும் படங்கள் எதுவும் இல்லாததால், அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் அமைதியாக இருந்து வருகிறார். மேலும், முதல்வர் விஜய் தொடர்பான அரசியல் சர்ச்சைகளிலிருந்தும் அவர் விலகியே உள்ளார்.
விஜய்யுடன் இணைத்து பரவிய வதந்திகளைக் தொடர்ந்து, ஊடகங்களின் பார்வையில் படாமல் வேண்டுமென்றே திரிஷா தவிர்த்து வருவதாக செய்திகள் பரவின. மேலும், இந்த அரசியல் சூழலில் அதிகப்படியான விவாதங்களைத் தவிர்க்க அவர் நடிப்பைவிட்டே விலக முடிவெடுத்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின.
ஆனால் இதுகுறித்து திரிஷா தரப்பில் விசாரித்தால் மறுக்கிறார்கள். நடிப்பிலிருந்து விலகும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். புதிய படங்களில் ஒப்பந்தமாகத் அவர் தயாராகவே இருப்பதாகவும், ஊடகங்களைச் சந்திப்பதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் கூறுகிறார்கள். அதோடு, அரசியலுக்கு வருவதில் திரிஷாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் கூறுகிறார்கள். மேலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் திரிஷா நடித்துள்ள "விஸ்வாம்பரா", மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்துள்ள "ராம்" ஆகிய படங்கள் திரைக்கு வர தாமதமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!