
தமிழ் ‛டைட்டானிக் 7 ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் ரசிகர்களுக்கு பிடிக்கும் : கலையரசன்
சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்தப் படம் 4 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் வருகிற 16ம் தேதி வெளிவருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "கவுந்து போகும்" என்ற நெகட்டிவ் டைட்டில் இருப்பதால்தான் வெளியாகவில்லை என்ற பலரும் கருத்து சொல்ல தற்போது வெறும் "டைட்டானிக்" என்ற பெயரிலேயே வெளியாக இருக்கிறது.
இதுகுறித்து கலையரசன் கூறியிருப்பதாவது: "டைட்டானிக்" ஒரு முழுமையான ரொமான்ட்டிக் - காமெடி திரைப்படம். பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவம், ஐடி வேலை என வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் நடக்கும் காதலைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கிறது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பே தயாரான படம் இது. அப்போதே வெளியாகியிருந்தால், இந்த நேரம் எனக்கு இது போன்ற காதல் கதைகள் நிறைய வந்திருக்கும். தயாரிப்புச் சிக்கல்களால் தாமதமானாலும், இயக்குநர் ஜானகி அண்ணனுக்காகவே இந்தப் படத்தை நான்காவது முறையாக விளம்பரம் செய்து வருகிறேன். படம் இப்போது பார்த்தாலும் மிகவும் ஃபிரெஷ்ஷாக இருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…