
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் கூட்டணி?
இந்த நிலையில் விஜய் மற்றொரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது . சமீபத்தில் விஜய்யை சந்தித்து முதல்வன் பாணியில் இயக்குனர் ஷங்கர் ஒரு கதையை கூறி அது விஜய்க்கு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது . ஷங்கர் தற்போது இயக்கி வரும் இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி முடித்தவுடன் விஜய் படம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது விஜய்யின் 70வது படமாக உருவாகும் என்கிறார்கள். அதற்கு முன் விஜய்யின் 69வது படத்தை அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய்யும், ஷங்கரும் ஹிந்தியின் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கான நண்பன் படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!