ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் தி ஒன்
ஜூன் 09, 2026
Advertisement
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதாபாத்திரங்கள் ஒரிடத்தில் இணைவதும், ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கைக்குள் இன்னொரு பாத்திரம் வந்து செல்வதையும் ஹைப்பர் லிங் என்பார்கள். அந்த ஜார்னரில் உருவாகி வரும் படம் "தி ஒன்: வித்தின் யூ"
ஆதிரன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ”பருத்திவீரன்” சரவணன், பாவல் நவகீதன் மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கீதா கைலாசம், பிரவீன் ராஜா, ராஜீவ் ஆனந்த், கணேசன் கலியமூர்த்தி, ஜே.எஸ். கவி, ஸ்ரீதர், ஆதிரா, பொற்கொடி, அனுபமா உன்னி, ஹீனா ரத்தோர் மற்றும் ஸ்மிருதி நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரிஷ்னி பிக்சர்ஸ் சார்பில் கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் தயாரிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது “இது ஹைப்பர்லிங்" ஆக்ஷன் டிராமா திரில்லர் வகையைச் சேர்ந்த படமாகும். கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் கண்கவர் பின்னணியில் அதே நேரத்தில் கணிக்க முடியாத இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. சிவராத்திரியன்று, முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளை கொண்ட நான்கு மனிதர்கள், எதிர்பாராத சம்பவங்களின் தொடர் மூலம் எவ்வாறு ஒரு அசாதாரணமான நிகழ்வுகளுக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் பேசுகிறது” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!