தமிழுக்கு வரும் சுதீர் பாபு
அக் 28, 2022
Advertisement
பான் இந்தியா படங்கள் பெருகி வருவதால் இப்போது சினிமாவில் மொழிகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது. டாப் ஹீரோக்கள் மட்டுமல்லாது அடுத்த வரிசை ஹீரோக்கள் தமிழுக்கு வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் வளரும் இளம் தெலுங்கு நடிகரான சுதீர் பாபு.
ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் இது தயாராகிறது. இது சுதீர் பாபுவின் 18வது படமாகும். தற்போது படத்தின் பர்ஸ்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெற்கு மும்பையை சேர்ந்த அருண் கோலி என்பவரிடமிருந்து சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு எழுதிய உள்நாட்டு கடிதமும், அதில் "" அவசரம்: உங்களது வருகை அவசியமானது"" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்துடன் துப்பாக்கி, தோட்டாக்கள், பழைய ரூபாய் நோட்டு, தொலைபேசி மற்றும் சுருட்டு ஆகியவைகளும் இடம் பெற்றிருக்கிறது.
இதன் கதைக்களம் 1989ம் ஆண்டில் குப்பம் எனும் ஊரில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பட நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!