
சூதுகவ்வும் 2வில் சத்யராஜ்
தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின் மெண்ட் சி.வி.குமாரே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். பிரபுதேவா நடித்துள்ள யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜூன் இயக்குகிறார்.
இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய்சேதுபதி மறுத்துவிட்ட நிலையில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் முதல்பாகத்தில் நடித்த கருணாகரன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!