
ராம் சரணுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்
பிப் 09, 2024
Advertisement
நடிகர் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் சுகுமார் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்பட்டு பின்னர் கைவிடப்பட்டாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் மீண்டும் ஜான்வி கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான்வி கபூர் ஏற்கனவே தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான்வி கபூர் ஏற்கனவே தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…