
விக்ரம் 62வது படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா
பிப் 09, 2024
Advertisement
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கடந்த சில வருடங்களாக படங்களில் தனது வித்தியாசமான நடிப்பில் நடிகராக அசத்தி வருகிறார். ஏற்கனவே இந்தியன் 2, கேம் சேஞ்சர், தனுஷ் 50 போன்ற முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62வது படத்தில் நடிக்கின்றார். இப்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்ததாக அறிவித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சிபு தமின்ஸ் தயாராகின்றார். அதிரடி ஆக் ஷன் கதையில் உருவாகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மெர்சல், மாநாடு போன்ற படங்களில் வில்லனாக நடித்து இவர் அசத்தினார். மேலும் முதன்முறையாக விக்ரம் உடன் இணைந்து நடிக்க போகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!