
ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு டும் டும் - நிச்சயதார்த்தம் முடிந்தது
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமாளின் மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா பானு தம்பதிகளுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கதீஜா ரகுமானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
|
மணமகன் பெயர் ரியாஸ். திருமண தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. கதீஜா ரகுமான் இஸ்லாமிய கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றுகிறவர். பர்தா அணியாமல் பொது இடங்களில் தோன்ற மாட்டார். தற்போது தனி பாடல்களை பாடி வருவதோடு, இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார்.
கதீஜா கூறுகையில், ‛‛கடவுளின் ஆசீர்வாதத்தோடு இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் அறிவிக்கிறேன். சவுண்ட் இன்ஜினியர்ரியாஸ் தீன் ஷெய்க் மொஹமுத் என்பவருடன் எனக்கு டிச., 29ல் நிச்சயதார்த்தம் நடந்தது"" என கூறி அவரின் போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!