
பிளாஷ்பேக் : குறைந்த படங்களில் நடித்து சினிமாவை விட்டு ஒதுங்கிய தூத்துக்குடி பெண்
பாட்ஷா அவருக்கு முதல் படமல்ல... தூத்துக்குடியில் பிறந்த செண்பகம், "தூதுபோ செல்லக் கிளியே" படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பஞ்சு அருணாச்சலம் இயக்கிய "கலிகாலம்", சரத்குமாரின் "ஐ லவ் இந்தியா", பார்த்திபனின் "உள்ளே வெளியே", சத்யராஜின் "உடன் பிறப்பு" "ஜல்லிக்கட்டு காளை", "திருமூர்த்தி" ஆகிய படங்களில் நடித்தார். 1995-ம் ஆண்டு வெளியான "பசும்பொன்" படத்தில் நடித்தார். அது தான் இவரது கடைசி தமிழ் படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.
80களில் நிலவிய மும்பை மற்றும் மலையாள நடிகைகளின் ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தூத்துக்குடி பெண்ணான செண்பகம், பின்னர் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் இணைந்து வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.



















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…