
பிரபாஸ், பிரசாந்த் நீல் கூட்டணியின் சலார் 2 அப்டேட்
"சலார்" படத்தின் இரண்டாம் பாகமாக "சலார் - சவுர்யாங்க பர்வம்" 2024ல் கொஞ்ச நாட்கள் படமாக்கப்பட்டது. 2026ல் படம் வெளியாகும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், அதன்பின் அது பற்றிய அப்டேட் பெரிதாக வரவில்லை.
பிரபாஸ், மேலும் சில பிரம்மாண்டப் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் இன்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு "சலார்" படத் தயாரிப்பாளரான ஹொம்பாலே பிலிம்ஸ் "சலார்" படத்தின் எக்ஸ் தளத்தில், “இந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியும், பாக்ஸ் ஆபிஸின் சலார் -ம் ஆன நமது அன்பிற்குரிய பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
அந்த "டைனோசர்" மீண்டும் களமிறங்கி, மீண்டும் ஒருமுறை அதிரடியைக் கட்டவிழ்த்து விடுவதைக் காண ஆவலாகக் காத்திருக்கிறோம்…சலார் 2,” என வாழ்த்தியுள்ளார்கள்.
பிரசாந்த் நீல் தற்போது ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தை முடித்த பின்பு "சலார் 2" பக்கம் வருவார் எனத் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!