
ரணபலி-யா இல்லை ரணபாலி--யா ? குழப்பும் படக்குழு
திரையுலகில் பொருத்தமான ஜோடியாகப் பார்க்கப்பட்டவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்த பிறகு நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் "ரணபாலி".
பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். நேற்று படம் வெளியாகும் அனைத்து மொழிகளிலும் டிரைலரை வெளியிட்டார்கள்.
டிரைலரில் விஜய் தேவரகொன்டா கதாபாத்திரத்தை, "சிங்கனமல பொப்பிலி ரணபாலி" என்ற பெயரில் சுருக்கமாக "ரணபாலி" என்றுதான் உச்சரிக்கிறார்கள். ஆனால், டிரைலரில் வரும் டைட்டிலில் ‛ரணபாலி" என்றும் இறுதியில் படத்தின் போஸ்டரில் "ரணபலி" என்றும், அதற்கான எக்ஸ் தளப் பதிவில் "ரணபாலி" என்றும் போட்டுள்ளார்கள்.
ஒரே படத்தின் பெயரை இரண்டு விதமாக போட்டு குழப்பியுள்ளது படக்குழு. இப்படியான தவறுகள், கவனக் குறைவுகள் படத்திலும் இருக்காது என்று நம்புவோம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!