கங்கனா டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் : காரணம் என்ன ?
மே 04, 2021
Advertisement
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணவத். தற்போது "தலைவி" தமிழ்ப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் கங்கனா. கடந்த இரண்டு தினங்களாக மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் நடக்கும் கலவரங்கள் குறித்து தன்னுடைய டுவிட்டர் கணக்கில் அடிக்கடி பதிவுகளை இட்டு வந்தார்.
நேற்று மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
அவருடைய சில கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை தடை செய்துவிட்டது. தொடர்ந்து அவருடைய கணக்கிலிருந்து வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிட்டு வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளோம் என டுவிட்டர் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!