
தீபிகா படுகோனே அப்பாவுக்குக் கொரானோ பாதிப்பு
65 வயதான பிரகாஷ் படுகோனே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பத்து நாட்களுக்கு முன்பாகவே பிரகாஷ் அவரது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோர் லேசான தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரானோ தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால், பிரகாஷுக்கு உடல் வெப்பநிலை குறையாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குணமடைந்துவிட்டாராம். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் வீடு திரும்புவார். அவரது மனைவியும், மகளும் வீட்டிலேயே குணமடைந்துவிட்டதாக அவர்களது குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!