
கங்கனா டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் : காரணம் என்ன ?
நேற்று மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
அவருடைய சில கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை தடை செய்துவிட்டது. தொடர்ந்து அவருடைய கணக்கிலிருந்து வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிட்டு வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளோம் என டுவிட்டர் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!