
முதல் 100 கோடி வசூலைப் பெற்ற இம்ரான் ஹஷ்மி
ஆக 20, 2026
Advertisement
2003ல் வெளிவந்த "புட்பாத்" ஹிந்திப் படம் மூலம் நடிகரான அறிமுகமானவர் இம்ரான் ஹஷ்மி. அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் 2007ல் வெளிவந்த "ஆவராப்பன்" படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அப்படம் வியாபார ரீதியாக தோல்வியடைந்த ஒரு படம்.
இத்தனை வருடங்களாகத் திரையுலகில் இருக்கும் இம்ரான் முதல் முறையாக 100 கோடி வசூலைப் பெற்றுள்ளார். நிதின் கக்கர் இயக்கத்தில் இம்ரான் ஹஷ்மி, திஷா படானி, ஷபனா ஆஸ்மி மற்றும் பலர் நடித்த "ஆவாரப்பன் 2" படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது.
வெளியான 5 நாட்களிலேயே 100 கோடி வசூலைக் கடந்த படம், தற்போது உலக அளவில் 150 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த வருடம் வெளிவந்த ஹிந்திப் படங்களில் 6வது 100 கோடி படமாக இப்படம் அமைந்துள்ளது.
இதற்கு முன்பு வெளிவந்த "துரந்தர் 2" படம் 1800 கோடி, "பார்டர் 2" படம் 450 கோடி, "பூத் பங்களா" படம் 240 கோடி, "தமால் 4" படம் 220 கோடி, "வெல்கம் டு த ஜங்கிள்" படம் 180 கோடி வசூலைப் பெற்றுள்ளன. "காக்டெயில் 2" படம் 140 கோடி, "ராஜா ஷிவாஜி" படம் 130 கோடி வசூலையும் கடந்துள்ளன.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!