மகாத்மா காந்தியாக நடிக்கும் அஞ்சான் பட வில்லன்
ஆக 20, 2026
Advertisement
தேசப்பிதா மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே இந்தியாவின் ஒரு சில மொழிகளில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், மகாத்மா காந்தியின் அதிகம் அறியப்படாத 21 நாட்களை மையமாகக் கொண்டு தற்போது ஹிந்தியில் புதிய படம் ஒன்று உருவாகிறது. பாலிவுட் நடிகரும், "அஞ்சான்" படத்தில் வில்லனாக நடித்தவருமான மனோஜ் பாஜ்பாய் இதில் மகாத்மா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுகிர் மிஸ்ரா இயக்குகிறார்.
சுதந்திரம் கிடைக்கும் தருவாயில், டில்லி அதிகாரத்தின் மையமாக மாறிக் கொண்டிருந்த போது காந்தியடிகள் எடுத்த ஒரு எதிர்பாராத முடிவையும், அதன் மூலம் அவர் தன்னை எவ்வாறு மறுசீரமைத்துக் கொண்டார் என்பதையும் இப்படம் ஆழமாக பதிவு செய்ய இருக்கிறாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!