மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில், கல்கி யுவா என்ற இருபத்தியொரு வயது இளைஞர் தயாரிக்கும் படம் "கண்டுபிடி கண்டுபிடி". மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜ் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார். முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் இந்தப் படத்தின் கதை நாயகன் இயக்குநர் சீமான். பிரபு சாலமனின் உதவியாளரான ராம் சுப்பாராமன் இயக்குகிறார்.
போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் தேனி மாவட்டம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார்.