விமர்சனம்
அ நிறம் | அளவு
லேடீஸ் டாய்லெட்டில் தவறுதலான நுழைந்த காரணத்தால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டவர் ஹீரோ ஏகன். புதுசாக ஒரு கல்லூரியில் சேர்கிறார். அங்கே அவர் மட்டுமே ஆண். படிக்கும் மற்ற அனைவரும் பெண்கள். அது எப்படி என்பது சஸ்பென்ஸ். அங்கே ஸ்ரீதேவியை காதலிக்கிறார். அந்த காதல் முறிகிறது. சென்னையில் பணிபுரியும் போது பெமினாவை காதலிக்கிறார். அந்த காதலும் முறிகிற சூழ்நிலை. உண்மையில் என்ன சிக்கல்?. யாருக்கு பிரச்னை? கடைசியில் ஹீரோ காதல் சக்சஸ் ஆனதா என்பது ஹைக்கூ கதை.
இரண்டு காதலிகள், ஒரு காதல், பிரச்னை, பிரிவு என வழக்கமான கரு மாதிரி தெரிந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இருக்கிறார் இயக்குனர் யுவராஜ். காதலை புதுசா உளவியல் கலந்து சொல்லி இருக்கிறார்.
பெண்கள் படிக்கும் கல்லூரியில் ஒரே ஆண் என கதையும் புது ரூட்டில் பயணிக்கிறது. அந்த சீன்களில் அப்பாவிதனம், அவஸ்தை கலந்த நடிப்பில் ஹீரோ ஓரளவு நடித்து இருக்கிறார். காதல் காட்சிகள் ஓகே. காமெடியும் செட்டாகி இருக்கிறது. வேலை இல்லாமல் தவிப்பது, குடித்து விட்டு வம்பு இழுப்பது போன்ற இடங்களிலும் நடிப்பு ஓகே. இடைவேளைக்குபின் காதல் அனுபவம் காரணமாக அவர் நடிப்பு மாறுகிறது. கிளைமாக்சில் இன்னொரு முகம் காண்பிக்கிறார். அதுதான் கதையின் முக்கியமான விஷயம். படத்தின் தயாரிப்பாளர் மகன் என்பதால் ஹீரோ ஏகனுக்கு ஏற்ப சீன்கள், டயலாக் வைத்து அவர் கேரக்டரை வலு ஆக்கி இருக்கிறார் இயக்குனர்.
ஆனாலும் ஹீரோவை விட கேரக்டர், நடிப்பில் ஹீரோயின்கள் இருவரும் பின்னி எடுக்கிறார்கள். கல்லூரி காதலியாக வரும் ஸ்ரீதேவி பக்கத்துவிட்டு பெண் மாதிரி இருக்கிறார். அவர் நடிப்பும் கியூட். பல சீன் களில் எனக்கு நல்லா நடிக்க தெரியும் என நிரூபிக்கிறார். இன்னொரு ஹீரோயின் பெமினா
இரண்டாம் பாதியில் சில இடங்களில், கிளைமாக்சில் தன் தரப்பு நியாயத்தை சொல்லும் இடங்களில் , சில கேள்விகள் கேட்கும் இடங்களில் முத்திரை பதித்து இருக்கிறார். இன்றைய இளம் பெண்களின் அடையாளமாக, பல காதலிகளின் குரலாக அவர் கேரக்டர் இருக்கிறது. அவரும் அழகாக இருக்கிறார், நடிப்பும் அப்படி.
இரண்டு காதல்களை வித்தியாசமாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். காதலின் பிரிவு, காதலனின் மன பிரச்னை, வேறு வகையான உளவியல் பிரச்னை என திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது. ஆனாலும் முதற்பாதியில் வேகமாக ஓடும் கதை, அடுத்த பாதியில் குழம்புகிறது. ஹீரோ கேரக்டர் மாறுவதும், அதிர்ச்சி கொடுப்பதும் ஓகே என்றாலும் அதை அழுத்தமாக சொல்லவில்லை. சில விஷயத்தை இன்னும் எளிமையாக சொல்லி இருக்கலாம். காதலில் பிரச்னை வரலாம். அது டாக்ஸிக் ஆக மாறக்கூடாது. குறிப்பாக காதலால் பெண்கள் பாதிக்கப்பட கூடாது. அவர்கள் மன ரீதியாக துன்புறுத்தபட கூடாது என்ற கருத்தும், அதற்கேற்ற சீன்களும் படத்தை வேறுபடுத்தி காண்பிக்கிறது.
ஹீரோவின் கேரக்டர் காதலுக்கு அல்லது பெண்களுக்கு எதிராக இருப்பது மாதிரி தெரிந்தாலும், காதலி மீதான அளவுக்கு அதிகமான அக்கறை, பயம், ஆர்வக்கோளாறு என்ற ரீதியில் கதையை ஆழமாக சொல்லி இருப்பதை பாராட்டலாம். சின்ன சின்ன வசனங்கள் ஈர்க்கின்றன. ஸ்ரீதேவி முதற்பாதியிலும், பெமினா அடுத்த பாதியிலும் பல இளம் பெண்களின் பிம்பமாக, பல காதலிகளின் அடையாளமாக வருகிறார்கள். சில இடங்களில் வந்தாலும் ஹீரோ நண்பன் சபரீசன் கேரக்டர், நட்பு, விட்டு கொடுப்பது டச்சிங். ஜோ ஹரிகரனின் எழுத்து கதைக்கு பிளஸ்
திரைக்கதை வடிவில் நல்ல முயற்சி. காதல் உருவாகும் விதம், வளரும் விதம், பிரச்னையில் சிக்கி தவிக்க விதம் பல கேள்விகளை எழுப்புகிறது. குழந்தைகள், பெரியவர்களுக்கு பிடிக்காவிட்டாலும் இளசுகளுக்கு குறிப்பாக காதலிப்பவர்களுக்கு, காதலித்தவர்களுக்கு படம், சொல்லப்படும் கருத்து பிடிக்கும். பல பெண்களுக்கு கதை, சில சீன்கள் பிடிக்கும் சித்துகுமாரின் பின்னணி இசை, பாடல்கள் படத்தை இன்னும் இளமையாக்கி, ரசனை ஆக்கி இருக்கிறது. பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. ஒரு பாடலுக்கு பிரிகிடா ஆடி இருக்கிறார். ஆனால் அது படத்துடன் ஒட்டவில்லை.
ஆனாலும் இரண்டாம்பாதி, கிளைமாக்ஸ் திருப்தி இல்லை. வழக்கமான பாசிட்டிவ் மோடில் படம் முடிவதும் ஏமாற்றம். புதுசா காதலை சொல்ல ஆரம்பித்து அதை உளவியல் ரீதியாக கொண்டுபோய் எப்போதும் போல முடித்து இருப்பது படத்தை சராசரி ஆக்குகிறது.
ஹைக்கூ - காதலை டாக்ஸிக் ஆகும் காதலன் கதை

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!