
ரிலீசுக்கு முன்பே ஓடிடி உரிமம் விற்பனையான ஹைக்கூ
படம் பற்றி இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூறும்போது “ காதல் கதைகள் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வரும் நிலையில், "ஹைக்கூ" வெளியாகிறது. இளம் நடிகர்கள், வண்ணமயமான காட்சிகள், மனதை வருடும் இசை மற்றும் புத்துணர்ச்சியான திரை அணுகுமுறை ஆகியவற்றுடன், இந்தப் படம் காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளது. படத்தின் புதுமையான கதை மற்றும் தனித்துவமான திரை அணுகுமுறை ஓடிடி தளத்தின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, இந்த டிஜிட்டல் உரிமை கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!