நாயகி - ஸ்வாதி
நாயகன் - நவீன் சந்திரா
இயக்குனர்- ராஜா கிரண்
சுப்ரமணியபுரம் படத்தின் வாயிலாக கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்வாதி தெலுங்கில் நடித்துள்ள பேய் படம்தான் திரிபுரா. நடிகை அஞ்சலி நடித்த கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகமாக திரிபுரா படம் உருவாக்கப்பட்டுள்ளது.கீதாஞ்சலி படத்தை இயக்கிய இயக்குநர் ராஜா கிரண் திரிபுரா படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதைப்படி ஒரு கிராமத்து பென் திரிபுரா, அவளுக்கு அவ்வப்போது சில விசித்திர கனவுகள் வருகின்றது. அப்படி வரும் கனவுகள் நிஜ வாழ்க்கையிலும் நடந்துவிடுகிறது. இவளின் நிலை கண்ட பெற்றோர் மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத் அழைத்து வருகின்றார்கள். அங்கே ஒரு மனோதத்துவ நிபுனரிடம் அழைத்து செல்கிறார்கள்.சிகிச்சையும் நடைபெறுகிறது. சிகிச்சைக்காக ஹைதராபாத் வரும் ஸ்வாதிக்கு மனோதத்துவ மருத்துவரிடம் காதலும் வருகிறது.
ஒரு சுபயோக சுப தினத்தில் பெற்றோர்களின் அனுமதியோடு திருமணாம் செய்து கொள்கிறார்கள். நாட்கள் நகர்கிறது கனவுகளும் வந்து போகிறது, ஒரு நாள் மிக மோசமான ஒரு கனவு வருகிறது. திரிபுரா அவளது கனவனை கத்தியால் கொள்வதுபோல். திரிபுரா இதற்கு என்ன செய்தார்? கொலை கனவு நிஜமானதா? என்பதே படத்தின் இரண்டாம் பாதி.
இதில் திரிபுராவாக ஸ்வாதி, படத்தின் முக்கியமான நபர், பார்த்து பழகிய பெண் போல் இருக்கும் இவரது இயல்பான தோற்றம் கதைக்கு நன்றாகவே பொருந்தி போகிறது. இயல்பான கிராமத்து பெண்ணாகவும், குழப்பமான மனைவியாகவும் அழகாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
மனோத்துவ நிபுணராக இளம் நடிகர் நவீன் சந்திரா, தன் கதாபாத்திரத்து தேவையானதை மிகச்சரியாக செய்திருக்கிறார்.சப்தகிரியின் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன. கிளைமேக்ஸ் காட்சிகளில் படத்தின் பல முடிச்சுகள் அவிழும் இடம் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. இவ்வளவு இருந்தும் படத்தில் சில பலவீனமான விசயங்கள் இருக்கிறன.
என்ன தான் சஸ்பென்ஸ் இருந்தாலும் அதை இவ்வளவு நேரமா இழுக்க வேண்டும். வியாபார நோகத்திற்காக சேர்க்கப்பட்ட காட்சிகளை தவிர்த்து படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். கனவு காட்சிகளுக்கான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரித்திருக்கலாம். ஒளிப்பதிவை நிச்சயம் பாராடியாக வேண்டும், காட்சிகளுக்கு தகுந்தார் போல் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. படத்தின் இயக்குனர் ராஜா கிரன் ஒரு நல்ல கதையை அழகாக ஆரம்பித்து நல்ல த்ரில்லராக முடித்திருக்கிறார்.
இடையில் தான் கொஞ்சம் வழி தவறி நீளத்தை கூட்டிவிட்டார், அதை தவிர்த்திருந்தால் நிச்சம் இப்படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.மொத்தமாக திரிபுரா ஸ்வாதியின் அருமையான நடிப்பில், வித்தியாசமான பின்புலத்துடம் நன்றாக இருக்கிறது.
திரிபுரா- மெலிதாக மிரட்டுவாள்