Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட்,Romeo Julliet
‘‘கள்வனின் காதலி’’ படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன், இயக்குநராக களமிறங்கியிருக்கும் படம் ரோமியோ ஜூலியட்.
22 ஜூன், 2015 - 15:14 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ரோமியோ ஜூலியட்

தினமலர் விமர்சனம்ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடித்து, லக்ஷ்மன் இயக்கத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருத்தன் எனும் கருத்தை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் தான் ரோமியோ ஜூலியட். டி.இமானின் இசையில், அனிருத் ரவிச்சந்தர் பாடிய டண்டணக்கா... பாடலின் மூலம் படம் ரிலீஸாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பட்டி தொட்டியெங்கும் எதிர்பார்ப்பையும், டி.ராஜேந்தரின் எதிர்ப்பையும் கிளப்பிய ரோமியோ ஜூலியட் என்ன கதை, எப்படி இருக்கிறது.? பார்ப்போம்...!


கதைப்படி பெற்றோர், உற்றார், உறவினர் யாருமில்லாத ஜூலியட் ஹன்சிகா, ஒரு ஹோமில் வளர்ந்து ஆளாகிறார். ஆளான பின் ஏர்ஹோஸ்டர்ஸாக விமானத்தில் பணிபுரியும் அம்மணி, தோழிகளுடன் ஒரு வசதியான குடியிருப்பில் வசிக்கிறார். எதையும் நெகட்டீவ்வாக யோசிக்கும் ஹன்சிகா, பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறார். அதன் வெளிப்பாடாக பாசிட்டீவ் பிரியரான ரோமியோ -கார்த்திக் எனும் ஜெயம் ரவியை, பணக்காரர் கெட் - அப்பில் பார்த்து காதலிக்க தொடங்குகிறார்.


நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், உள்ளிட்ட பெரும் புள்ளிகளின் ஜிம் கோச்சரான ஜெயம் ரவி தொழில் நிமித்தம், படத்தயாரிப்பாளர் விடிவி கணேசின் பென்ஸ் காரிலும், காசிலும் பவனி வருவது, ஹன்சிகாவுக்கு ரவியை வசதியானவராகவும், பெரும் புள்ளியாகவும் காட்டுகிறது. அதனால் ரவி பின்னால் அலைந்து திரிந்து அவரை காதலிக்க தொடங்குகிறார் ஹன்சிகா. ஒருக்கட்டத்தில் ரவி, வசதியானவர் அல்ல, வசதி படைத்தவர்களின் ஜிம் கோச்சர் எனும் உண்மை ஹன்சிகாவுக்கு தெரிய வருகிறது. காதல் பணால் ஆகிறது. ஆனால் ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் கொள்கை உடைய ரவி மீண்டும், ஹன்சிகாவுடன் கை கோர்த்தாரா.? அல்லது ஹன்சிகா வசதியான வேறு ஒருவருக்கு மாலையிட்டு மகிழ்ந்தாரா.? என்பது தான் ரோமியோ ஜூலியட் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!


ஜெயம் ரவி - கார்த்திக் எனும் ஜிம் கோச்சராக செம கெத்தாக இருக்கிறார். டண்டணக்கா பாடலில் டி.ஆரின் ரசிகராக செம குத்து குத்துகிறார். ஒரேநாளில் காதலிக்காக ஒன்றரை லட்சம் செலவு செய்து விழி பிதுங்கும் இடங்களிலும், காதலியை மீண்டும் கைபிடிக்க போராடும் இடங்களிலும், நடிப்பிலும் உச்சம் தொட்டிருக்கிறார். ஹேட்ஸ் ஆப், கீப் இட் அப் ரவி!


ஐஸ்வர்யாவாக ஹன்சிகா மோத்வானி, அழகு பதுமையாக வந்து அம்சமாக நடித்திருக்கிறார். ஆனாலும், அநாதையான அவர் பாசத்திற்காக தானே ஏங்க வேண்டும், ஆரம்பத்தில் பணத்திற்காக ஏங்குவது லாஜிக்காக இடிக்கிறது.


நிஷா - பூனம் பாஜ்வா, ஜெயம் ரவி-ஹன்சிகாவின் காதல் ஜெயிக்க வேண்டி, காதல் தியாகி ஆக்கப்பட்டிருப்பதும், வசதியான வீட்டுப்பிள்ளையாக அர்ஜூனாக வரும் வம்சி கிருஷ்ணா மேற்படி நாயகர் - நாயகியின் காதல் ஜெயிக்க வேண்டி வலிய காதல் வில்லன் ஆக்கப்பட்டிருப்பதும் செயற்கைதனமாக இருப்பது ரசிகனை சோர்வடைய செய்கிறது.


விடிவி கணேஷ், உமா பத்மநாபன், சங்கர நாராயணன், ஸ்ரேயா, மதுமிதா.. உள்ளிட்டவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் நடிகராகவே வரும் ஆர்யாவும் அசத்தியிருக்கிறார்கள்.


டண்டணக்கா..., இதற்கு தானே ஆசைபட்டாய்..., அடியே அடியே... உள்ளி்ட்ட ஐந்து பாடல்களும் டி.இமானின் இசையில் படத்திற்கு பக்காவாக பலம் சேர்த்திருக்கின்றன. சந்துருவின் வசனம், எஸ்.செளந்தர் ராஜனின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், லக்ஷ்மனின் எழுத்து இயக்கத்திற்கு மேலும் ப்ளஸ்.


ஆனாலும், ஆன்டனியின் ஏனோ தானோ எடிட்டிங்கும், பேஸ்புக்கில் கார்த்திக் - ஜெயம் ரவியை தேடி பிடிக்கும் ஹன்சிகா அண்ட் கோவினர், அதில் அவரது ஜிம் கோச்சர் டிடெயிலையும் படித்திருக்கலாமே.? எனும் கேள்வி எழுப்பும் லாஜிக் மிஸ்டேக்கும், சற்றே ரோமியோ ஜூலியட்டை ரோதனை - சோதனைக்கு உள்ளாக்கிவிடுவது பலவீனம்!


மற்றபடி ரோமியோ ஜூலியட் - இக்காலத்திற்கும் கரெக்ட்! ரசிகனுக்கு, வூடு ஜூட்?!


குமுதம் விமர்சனம்
ரோமியோ ஜூலியட்


டைட்டில் போடும்போதே அதிகக் கைதட்டல் வாங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும்!

பாகவதரில் ஆரம்பித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித் என்று எல்லா ஹீரோக்களின் காதல் காட்சிகளையும் காண்பித்த ஐடியா பலே.

நல்ல பணக்காரனாகப் பார்த்து கல்யாணம் பண்ணி செட்டிலாகிவிட வேண்டும் என்று நினைக்கிறார் ஹன்ஸிகா. அப்படி அவர் நம்பிக் காதலிக்கும் ஜெயம் ரவி, ஏழை என்று தெரிந்துவிட, காதலைத் தூக்கி குட் பை யில் போடுகிறார் ஹன்ஸ். அப்புறம் என்ன ஆச்சு என்பதுதான் ரோ.ஜூ! இயக்கம் லக்ஷ்மண்.

ஜிம் ட்ரெயினர் வேடம் ஜெயம் ரவியின் ஆறடி ஆஜானுபாகு உருவத்துக்கு அப்படியே பொருந்துகிறது. காதலுக்காக உருகுவதும், ஏமாற்றத்தில் மருகுவதும் செமை.

ஜில்லென்று இருக்கிறார் ஹன்சிகா. (காஸ்ட்யூமர் யாருப்பா?)

வழக்கம்போல் விடிவி கணேஷ்.

பூனம் பாஜ்வா அவசரத்தில் பேண்ட் போட மறந்துவிட்டார் போல!

டி.ஆர் ஸ்டைல் டண்டனக்கா பாட்டு சரியான ஒன்ஸ்மோர் குத்து, சௌந்தர்(ராஜன்)யமான கேமரா!

ஆண்களை ஏமாற்றும் பெண்கள் பற்றி டயலாக் வரும்போதெல்லாம் தியேட்டரில் விசில் சப்தம் பறக்கிறது. அத்தனை ஆண்களா நம் ஊரில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

ரிப்பீட் காட்சிகள் வெறுப்படிக்கி்ன்றன.


ரோ.ஜூ - காதல் கலாட்டா
குமுதம் ரேட்டிங் - ஓகே


கல்கி விமர்சனம்
ரோமியோ ஜூலியட்


ஜெயம் ரவியின் கனவு, தன்னை காலம் முழுதும் காதலிக்கிற அன்பான காதலி. ஹன்சிகா அன்பு கிடைக்காமல் இருப்பவர். தொழில் அதிபரைக் கைப்பிடித்து பணக்காரியாக வாழ வேண்டும் என்பது எண்ணம். வி.டி.வி. கணேஷ் காரில் பவனிவரும் ஜெயம் ரவியை பணக்காரன் என்று ஹன்சிகா காதலி்கிறார். காதல் கை கூடிவிட்ட நிலையில் ஜெயம் ரவியைப் பற்றிய செய்தி பத்திரிகையில் வர ஹன்சிகா காதலுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கிறார்.

பின்னர் ஜெயம் ரவி, பெரிய பணக்காரர் ஆகி ஹன்சிகாவை பழி வாங்கி அவரை கைப்பிடிக்கிறார் என்று அபத்தமாக கதை சொல்லாமல், படம் முடிவிலும்கூட, 'நான்தான் கார்த்தி, மாதம் 15000 சம்பளம்தான். என்ன ப்ரஷ்ஷா வாழ்க்கையை ஆரம்பிக்கலாமா?' என்று ஜெயம் ரவியின் இயல்போடு படம் முடித்திருப்பது ஆறுதல். இயக்குநருக்கு சபாஷ்.

ஜெயம் ரவி எனர்ஜி முழுவதும் பரவசப் படுத்துகிறது. பணம் மட்டும் வாழ்க்கை அல்ல. அன்பு, பாசம், உறவுகள், நேசம், இவைதான் நல்ல வாழ்க்கை என்று புரியவைக்க அவர் எடுக்கும் எல்லா முயற்சியிலும், அவரது நடிப்பு பட்டைத் தீட்டப்பட்ட வைரம் போல் ஜொலிக்கிறது.

ஹன்சிகா முன்பை விட நடிப்பிலும், அழகிலும் மெருகேறி இருக்கிறார்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

ரோமியோ ஜூலியட் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in