'கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல் | 'டேபிள் பிராபிட்' பார்த்த விக்ரமின் ‛வீர தீர சூரன்' | தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகுமா? | 2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! |
தமிழில் இருந்து ஹிந்திக்கு ஆர்வத்துடன் செல்லும் இயக்குனர்களின் படங்கள் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த ராதே, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்த லட்சுமி படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கிய உள்ள ஷெர்ஷா படமும் ஓடிடி தளத்தில் வெளிவருகிறது.
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் பில்லா 2, பட்டியல், அறிந்தும் அறியாமலும், ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன், இந்தப் படத்தின் மூலமாக ஹிந்தியில் அறிமுகமாகிறார். கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். இதில் விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருடன் கைரா அத்வானி, ஜாவின் ஜாப்ரி, ஷிவ் பண்டிட், பவன் சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனைத்து பணிகளும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும் கொரோனா அச்சுறுத்தலால் வெளியாகாமல் இருந்தது. திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கப்படும் சாத்தியகூறுகளும் இல்லை. இதனால் படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. அமேசான் நிறுவனம் இதன் உரிமத்தை வாங்கி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் எனத் தெரிகிறது.