ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா, அவரது கணவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இருவரும் இணைந்து கொரோனா நிவாரண நிதி சேகரிக்க கேட்டோ என்ற அமைப்பை துவக்கி நேற்று வீடியோ மூலம் நிதி திரட்ட அழைப்பு ஒன்றை வெளியிட்டனர். ரூ.7 கோடி நிதி திரட்ட எண்ணியுள்ள அவர்கள் தங்கள் சார்பில் ரூ.2 கோடி நிதி அளித்துள்ளனர்.
வீடியோவில் அவர்கள் கூறுகையில், “கொரோனா இரண்டாவது அலையில் நமது நாடு போராடிக் கொண்டிருக்கிறது. நமது மருத்துவப் பாதுகாப்பு முறை கடும் சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பாதிப்படையவது எனது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. அதனால், நானும் விராட்டும் '#InThisTogether' என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து கொரோனா நிவாரண நிதியை வசூலிக்க முடிவு செய்துள்ளோம். இந்த நிலைமையிலிருந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வெளியே வருவோம். இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் உதவி செய்ய முன்வாருங்கள். இந்த மோசமான சூழலில் உங்களது உதவி பலரது உயிரைக் காப்பாற்றும்,” என அனுஷ்கா சர்மா, விராட் கோலி நேற்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அவர்களது வேண்டுகோளுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ரூ.3.6 கோடி நிதி கிடைத்துள்ளதாக அனுஷ்கா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.