உதட்டில் முத்தம் - சர்ச்சையில் பாடகர் உதித் நாராயண் | பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வைரல் கிளிக்ஸ் | உலக தரத்தில் எம்புரான் டீசர் ; பிரபாஸ் பாராட்டு | கந்தன் கருணை, மௌனம் பேசியதே, மாஸ்டர் - ஞாயிறு திரைப்படங்கள் | 32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் |
அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்தவர் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய். இவரது அம்மா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இன்று மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஒரு சில வட இந்திய ஊடகங்களில் விவேக்கிற்குப் பதிலாக விவேக் ஓபராய் பெயரைக் குறிப்பிட்டு தவறாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதற்கு விளக்கமளிக்கும் வகையில் நடிகர் விவேக் ஓபராய் டுவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளார். “சென்னையில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், நான் மும்பையில் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன். ஆனாலும், தமிழ் திரையுலகத்தின் நடிகர் விவேக் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.