‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

ஹிந்தித் திரையுலகில் உள்ள சில பல ஹீரோயின்கள் தங்களது ஆடைகள் கிளாமராகவும், கவர்ச்சியாகவும் இருப்பதைப் பற்றிக் கவலைப்படவே மாட்டார்கள். அங்கிருந்துதான் தமிழ் சினிமாவுக்கும் கவர்ச்சி பேஷன் அதிகமாகப் பரவியது என்றும் சொல்வார்கள்.
ஹிந்தித் திரையுலகத்தில் சில படங்களில் நடித்துள்ள மாடல் அழகி ஊர்வசி ரவுட்லா, ஏற்கெனவே கன்னடப் படம் ஒன்றிலும் நடித்துவிட்டார். அடுத்து தெலுங்குப் படம் ஒன்றிலும் அறிமுகமாக உள்ளார்.
தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிடும் வழக்கம் உடையவர் ஊர்வசி. அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 33 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதிலேயே அவருடைய பிரபலம் என்ன என்பது புரிந்திருக்கும்.
நேற்று தன்னுடைய இன்ஸ்டாபக்கத்தில் 'பம் ரிப் ஜீன்ஸ்' அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. 'பம் ரிப் ஜீன்ஸ்' என்பது பின்புறத்திலும் ஆங்காங்கே கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் ஆடை. என்னுடைய லேட்டஸ்ட் பேஷன் இது என சில புகைப்படங்களைப் பதிவிட்டு தன் இன்ஸ்டா பக்கத்தை சூடற்றியிருக்கிறார் ஊர்வசி.