'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

சிறந்த கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வரும் ராணி முகர்ஜி 2014ல் மர்தாணி என்ற படத்தில் நடித்தார். பிரதீப் சர்க்கார் இயக்கிய அந்த படம் வெற்றி பெற்றது. அதன்பிறகு சரியான கதைகள் அமையாததால் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த ராணி முகர்ஜி, தற்போது ஹிச்கி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் ஹிக்கி பிராட் கோஹன்னின் ஹால்மார்க் தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் நோயால் பாதிக்கப்பட்ட நைனா மாதுர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராணி முகர்ஜி. வருகிற பிப்ரவரி 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த ஹிச்கி படத்தை விளம்பரம் செய்யும் வகையில், இரண்டு மாதங்கள் பிரமோஷனில் ஈடுபடப்போகிறாராம் ராணி முகர்ஜி.