வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

திடீரென அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது, இதனால் இந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான விமான போக்குவரத்து தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது, இந்த சமயத்தில் துபாய் சென்றிருந்த பாலிவுட் நடிகை சோனல் சவுகான் என்பவர் அங்கே இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டுள்ளார். இவர் தமிழ் தெலுங்கில் உருவான 'இஞ்சி இடுப்பழகி', பாலகிருஷ்ணா நடித்த 'லெஜன்ட், ரூலர்', பிரபாஸின் 'ஆதிபுரூஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனது நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை பதிவு ஒன்றை வைத்துள்ள சோனல் சவுகான், “மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே.. நான் துபாயில் தற்போதுள்ள சூழலில் சிக்கி தவிக்கிறேன். இந்தியாவுக்கு திரும்பும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் பத்திரமாக ஊர் திரும்புவதற்கான இந்திய அரசின் வழிகாட்டுதலையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நான் பாதுகாப்பாக ஊர் திரும்பும் விதமாக எனக்கு உதவி கிடைத்தால் நன்றி உடையவளாக இருப்பேன்” என்று கூறியுள்ளார் சோனல் சவுகான்.




